அரசு பள்ளியில் மாணவர்கள் தயாரித்த சோப்பு பினாயில் விற்பனை

மேகனூர் அருகே பரளி அரசு பள்ளியில் மாணவர்கள் தயாரித்த சோப்பு,  பினாயில் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மோகனூர் அருகே பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 152  மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களே சுய தொழில் மூலம்  பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. பினாயில், கை  கழுவும் நீர்மம், சோப்பு பவுடர், பாத்திரம் தேய்க்கும் பவுடர், சீயக்காய்  பொடி, குளியல் பொடி மற்றும் காகிதப் பை போன்ற பல்வேறு பொருட்களை மாணவர்கள்  உற்பத்தி செய்து வருகின்றனர். 
இந்த பொருட்கள் விற்பனை துவக்க விழா  பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன்  தலைமை வகித்தார். கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் சுப்பையன் விற்பனையை தொடங்கி  வைத்தார். மாணவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை  மக்கள் வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில்  வட்டார மேற்பார்வையாளர் சாந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி,  ஒருவந்தூர் புதூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Share this

0 Comment to "அரசு பள்ளியில் மாணவர்கள் தயாரித்த சோப்பு பினாயில் விற்பனை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...