குவைத்தில் தமிழ் வகுப்புகள் ஆரம்பம்!
தாய்மொழியை சுவாசிப்போம்...! எம் தமிழை நேசிப்போம்...!! என்ற முழக்கத்துடன் குவைத் வாழ் தமிழ் பிள்ளைகள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஜாதி, மத பேதமின்றி கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்விக் குழு ஏற்பாடு செய்த தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள் சால்மியாவில் உளள அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் - மொழிகள் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை (03.11.2018) காலை 8:30 மணிக்கு ஆரம்பமானது.
சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துன் நாஸர், துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி, கல்விக் குழு செயலாளர் முனைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் ஆகியோர் வகுப்புகளை துவக்கி வைத்தனர். பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தமிழ் வகுப்புகளை நடத்தினார்.
வாரந்தோறும் நடைபெறும் இவ்வகுப்புகளில் முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டத்துடன் 25 வாரங்களுடன கூடிய ஆறு மாதங்கள் படிப்பாக நடைபெறும். வாட்ஸ்அப் குழுமம் வாயிலாக சிறப்பு பயிற்சியும், மேடைப்பேச்சு பயிற்சியும் வழங்கப்படுகின்றன. ஆண்டுத் தேர்வுகள் & போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் ஃ சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்தப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு +965 9787 2482 என்ற சங்க அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது

Share this