தேசிய விருதுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வுதகவல் தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி மாணவர் களுக்குக் கல்வி கற்பித்து வரும் திருப் புட்குழி பள்ளி ஆசிரியர் செல்வ குமாருக்கு, நவ.21 அன்று புதுதில்லி யில் நடைபெறும் விழாவில், தேசிய அளவிலான மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விருதினை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி வழங்க உள்ளார்.
மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதில் தகவல் தொழில்நுட்பத் தைச் சிறப்பாக கையாளும் ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப விருதினை மத்திய அரசு வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதுக்காக தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் இருந்து, ஆசிரியர் செல்வகுமார் உட்பட 3 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
திருப்புட்குழி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 10 ஆண்டு களாகப் பணியாற்றி வரும் ஆசிரி யர் ஜி.செல்வகுமார், தனது சொந்தச் செலவில் 5-ம் வகுப்பை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றியுள்ளார். ஒரு கணிப்பொறியில் 8 மானிட்டர் களைப் பொருத்தி, தனது வகுப்பு மாணவர்களை 8 குழுவாகப் பிரித்து ஒலி, ஒளி வடிவில் கல்வி பயில வைக்கிறார். பாடங்களையும், பாடங் கள் தொடர்பான வினா-விடைகளை யும் கியூஆர் கோடாக மாற்றி, மாண வர்களது மேஜையில் ஒட்டி வைத் துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார். 

இதில் உள்ள கியூஆர் கோடில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டுப் பாடங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், அவர்கள் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் போன்ற விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இதனைப் பெற்றோர் வீட்டில் இருந்தே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


இதுகுறித்து ஆசிரியர் செல்வ குமார், ‘‘மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியது தொடர்பாக நானும், விழுப்புரம் மாவட்டத்தில் லாசர் ரமேஷ், சிவகாசியில் கருணைதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். யூடியூப் விடியோ வடிவில் பாடங்களை மாற்றிக் கொடுத்தால், மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்வார்கள். அதைத்தான் நான் செய்துள்ளேன். அடுத்து எங்கள் பள்ளியின் பெயரில் ஒரு மொபைல் ஆப் உருவாக்க உள்ளேன்’’ என்றார்

Share this

1 Response to "தேசிய விருதுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு "

  1. வாழ்த்துக்கள் செல்வகுமார்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...