கவுரவ விரிவுரையாளர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு

கலை, அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்  பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், உயர்கல்வி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது


புதுச்சேரியில் தாகூர் கலை கல்லுாரி, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, உள்ளிட்ட 6 அரசு கல்லுாரிகளிலும் காரைக்கால், மாகி, ஏனாம் கல்லுாரிகளிலும் பேராசிரியர் பணியிடம் அதிகளவில் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது


இதன் எதிரொலியாக, உயர் கல்வித் துறை, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தது.கடந்த 4 மற்றும் 5ம் தேதியில் நேர்முக தேர்வில் 250 விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்

நேர்முகத் தேர்வுக்கான முடிவு, உயர் கல்வி துறையின் www.dhte.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாட வாரியாக மொத்தம் 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்


சம்பளம் உயருமா?
அரசு கலை கல்லுாரிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது


இதனை உயர்த்த வேண்டும் என அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
 
இதுகுறித்து அரசு பரிசீலித்து வருவதால், சம்பளம் உயர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

Share this

0 Comment to "கவுரவ விரிவுரையாளர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...