சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு?

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமன நடவடிக்கையில், ஜாதி உட்பட, தனி நபர் விபரங்களில் குளறுபடி நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 1,325 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017ல் போட்டி தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டது. இறுதி பட்டியல், அக்டோபரில் வெளியானது.இந்த பட்டியலில் தகுதியுள்ள பலர், புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 


ஓவியம், தையல், உடற்கல்வி போன்ற பிரிவில், ஆசிரியர் பணிக்கு, தேர்வர்கள் தமிழ் வழி சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அரசு தரப்பில், தமிழ் வழி சான்றிதழ் வழங்காத நிலையில், தனியார் நிறுவனங்களில் பெறப்பட்ட சான்றிதழ் ஏற்று கொள்ளப் பட்டதாக, தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். 

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில், ஒரு பெண் தேர்வரின் ஜாதி ஒன்றாகவும், இறுதி பட்டியலில் வேறு ஒன்றாகவும் குறிப்பிட்டுஉள்ளது. 
அதேபோல், 'மற்றொரு பெண் தேர்வரின்சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலிலும், இறுதிபட்டி யலிலும், கணவனை இழந்தவர் என்றும், மற்றொன்றில், பொது பிரிவு என்றும் உள்ளது' என, குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறுகையில், ''சிறப்பு ஆசிரியர் பணி நியமன நடவடிக்கை குளறுபடிகள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Share this

2 Responses to " சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு?"

  1. கொக்கி குமாரு சும்மா இருக்கமாட்டியா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...