மாணவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் கல்லூரிகளுக்கு வர தடை?

மாணவர்கள் கல்லூரிகளுக்கு வாகனங்களில் வருவது தடை செய்ய கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. பொது பேருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கே இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மாநிலத்தில் அதிகரிக்கும் மாசு, மற்றும் விபத்து விகிதங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், பொது பேருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடகா உயர் கல்விதுறை அமைச்சர் ஜி.டி.தேவ்காடா கல்லூரி நிர்வாகங்களிடம் கலந்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களோடு விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this

0 Comment to "மாணவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் கல்லூரிகளுக்கு வர தடை? "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...