தேனி CEO வின் தீபாவளி வாழ்த்து

தீபஒளி வாழ்த்துக்கள்


லஞ்சம் இல்லா சமூகம்
        பஞ்சம் இல்லா உலகம்

நெஞ்சில் நேர்மை
      குணத்தில் அழகு

இறையாசியோடு
      இல்லத்தில் இணக்கம்

நடத்தியல் நற்பண்பு
நாட்டின் ஒழுங்கு
உலகின் அமைதி
இவையெல்லாம் சிறக்க

அறியாமையை அகற்றி
அகல்விழக்கு ஏற்றி
அறம் போற்றி 
புறம் பேசாது

தமிழ் புகழ் போற்றி
இனிய தீபாவளி நாளில்
அறிவு தீபம் ஏற்றி
அகற்றிடுவோம்
தீய சிந்தனையை

வெற்றிக் கோட்டையை 
எட்டும் தருணம்
திரும்பி பார்க்க நேரமில்லை 
வருகிறது
 பத்து, பதினொன்ற ு மற்றும்
 பனிரெண்டாம்வகுப்பு
 பொதுதேர்வு

நீங்கள் ஏற்றும் தீபம்
இலக்கை  நோக்கிய 
தீபமாகட்டும்

வெற்றித்தீபம் ஏற்ற 
விரைந்திடுவோம்

பகிர்ந்திடுவோம் 
இனிப்பு பலகாரம்

பரவசமாய் உண்போம்
சமரசமாய் வாழ்வோம்
 
சமதர்மக் கொள்கையுடன்
அனைவருக்கும்  பாதுகாப்பான 
 நல் தீபாவளி வாழ்த்துக்கள்
                  By 
 முதன்மைக் கல்வி அலுவலா்
 தேனி மாவட்டம்.

-
தேனி CEO வின் தீபாவளி வாழ்த்து

Share this