அரசு ஊழியர்களுக்கு 'I.D CARD' கட்டாயம்

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை. 


இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Share this