'அனைத்து தேர்வுகளுக்கும், இனி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வினாத்தாள் அமைக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி என, இரண்டு வகைகளில், வினாக்கள் வழங்கப்படும்.
இந்நிலையில்,
சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற,
புகார் எழுந்தது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது:
'குரூப் - 2' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி
பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள்
தயாரிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில்
அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள்
தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...