மேஷம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள்
மிகவும் கவனமாக பணிகளை
மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது
தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன்
மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக
பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5
ரிஷபம்
இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின்
போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டை விட்டு வெளியில்
தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.
மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார
தொடர்புகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
மிதுனம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல்
செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக
உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல
தடங்கல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
கடகம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன்,
மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது
நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும்
திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய
வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சிம்மம்
இன்று கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும்.
மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல்
இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்பு களை
சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம்
வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில்
தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும்
கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கன்னி
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன்,
மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு
ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத
செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
துலாம்
இன்று வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்
அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும்
மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது
நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து
முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள்
எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை
தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக
தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில்
எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும்
சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள்
மூலம் பெருமை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
தனுசு
இன்று பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த
காரியங்கள் சாதகமாக முடியும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர்
மனதில் இடம் பிடிப்பீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படும். சாதாரணமாக பேசினாலும்
மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும்,
ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
மகரம்
இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும்.
பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.
புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில்
இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்,
மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள்
எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கும்பம்
இன்று உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி
அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். செயல் திறமை அதிகரிக்கும். வெற்றி
பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.
எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு
உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
மீனம்
இன்று பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும்
எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக
காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம்
அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன்
தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...