மாவட்ட வாரியாக World Toilet Day போட்டிகள்; மத்திய அரசு அறிவிப்பு!தூய்மை இந்தியா திட்டத்தின் கடைசி ஆண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் இன்று 'உலக கழிப்பறை தின' போட்டிகளை அறிவித்துள்ளது!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டு இந்த போட்டியானது, மக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் ODF நிலைத்தன்மையுடன் சிறப்பு கவனம் செலுத்துடன் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

10 நாட்களுக்கு நடைப்பெறும் இப்போட்டியில்., (அதாவது நவம்பர் 9-ஆம் நாள் துவங்கும் பட்சத்தில் நவம்பர் 19-ஆம் நாள் போட்டிகள் முடிவடையும்). இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தின் கொள்கைகளை பின்பற்றும் வகையில் மாவட்டதின் அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்துள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிசு அளிக்கப்படும்.

அதுமட்டும் அல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தினை மையப்படுத்தி பல்வேறு போட்டிகள் ஒருங்கினைக்கப் படவுள்ளது.

அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைப்படி, டாப் 10 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநில மிஷன் இயக்குநர்கள் / மாநில செயலாளர் தூய்மை இந்தியா திட்டத்தின் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் வர்த்தக தூதல் நடிகர் அக்ஷய் குமார் அவர்களை நேரில் சந்தித்து அவருடன் தங்களது அனுபவத்தினையும், கருத்துகளையும் பகிர்ந்துக்கொள்ளலாம்.

இந்த போட்டியானது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் பொருந்தாது எனவும், வரும் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த போட்டிகளை குறிப்பிட்ட மாநிலங்களில் ஒருங்கினைக்க இயலாது எனவும் அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உலக கழிப்பறை தின' போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாவட்டங்கள் sbm.gov.in/wtd2018 என்ற இணைப்பில் பதிவு செய்யலாம். போட்டிகான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 19-ஆம் நாள் துவங்கி, நவம்பர் 30-வரை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது!

Share this

0 Comment to "மாவட்ட வாரியாக World Toilet Day போட்டிகள்; மத்திய அரசு அறிவிப்பு! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...