Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

102 வயதில் வானில் பறந்த பாட்டி: உலகிலேயே வயதான ஸ்கை டைவர்!

பறப்பதற்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 102 வயதான பாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமையை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சிட்னியை சேர்ந்தவர் ஜுங்கி ஐரீன் என்ற அந்த மூதாட்டி. இவருக்கு 102 வயதாகிறது. இவர் சமீபத்தில் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்மணிக்கு 220 கீ.மீ வேகத்தில் பறந்த போதும், தான் இயல்பாகவே உணர்ந்ததாக கூறினார்.
ஏற்கனவே 2016ம் ஆண்டு தனது 100 வைத்து பிறந்தநாளின் போது வெற்றிகரமாக ஸ்கை டைவிங் செய்து மிரட்டியுள்ளார் .எனினும் 102 வயதில் திரும்ப இதை நிகழ்த்தி காட்டியது வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்று இந்த விழாவை ஒழுங்கு செய்தவர்கள் கூறியுள்ளனர்.
வானிலை சீராக இருந்த போதிலும், மேலே அதிக குளிராக இருந்ததாக ஜுங்கி கூறியுள்ளார். தன் மகளை பறிகொடுத்த 'மோட்டார் நியூரோன்' என்ற வியாதிக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive