Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதாரை இணைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 வாக்காளர் அடையாள அட்டைகளுடன், ஆதார் எண் இணைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு பரிசீலனைக்கு வந்தது.


 அப்போது ஆதார் எண் இணைக்க கோரிய மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.


 மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சரியான உத்தரவை பிறப்பிப்பார்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக பான் அட்டை, அரசின் சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.


 ஆனால் வங்கிக் கணக்கு, தனியார் நிறுவன சேவைகள் போன்றவற்றுக்கு ஆதார் கேட்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலமாக கள்ள வாக்குகளை தடுக்க முடியும் என்று பரவலான கோரிக்கை எழுந்தது.


 அதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive