NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்?


ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு
வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8-ஆம் வகுப்புவரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி தமிழகத்தில் 2012 , 2013, 2017 ஆகிய ஆண்டுகளின் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.இதற்கிடையே வினாத்தாள் தவறு, வெயிட்டேஜ் முறை கடைபிடிப்பதில் பல்வேறு மாற்றங்கள், பல வழக்கு விசாரணை என பல்வேறு நிலையினை கடந்து தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு தகுதித் தேர்வு மட்டுமே என்றும் பணி நியமனத்திற்கு வேறு ஒரு தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது TNTET 2019 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் , ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019
தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
எனக் கூறப்பட்டுள்ளது.
தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி :
ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டு தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாது ஏனெனில் வரும் பாராளுமன்ற தேர்தலே காரணம்.தேர்தல் தேதி அறிவிப்பை பொருத்தே தாள் 1 , தாள் 2 தேர்வுக்கான தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
எப்படியும் தேர்வு மே மாதம் இறுதிக்குள் இருக்கும்.எனவே இப்போதே தயாராகுங்கள்.
# தாள் 1-ல் தேர்ச்சி பெற 1 முதல் 8-ஆம் வகுப்பு தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம் + உளவியல்
 # தாள் 2-ல் தேர்ச்சி பெற 6 முதல் 12-ஆம் வகுப்பு தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம் + உளவியல்
பணியிடம் குறைவுதான் என்று நினைக்காமல் தேர்ச்சி பெற்றால் பின் வேலைவாய்ப்பில் பணி நியமன தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே தேர்வில் அதிக கவனம் செலுத்தி தேர்ச்சி பெற மட்டும் படித்தால் போதும்.
     - வாழ்த்துக்கள்...




2 Comments:

  1. Its for only fees collection kollaikara politicians

    ReplyDelete
  2. ஏற்கனவே தேர்வாணவர்களுக்கு வேலை கொடுத்து விட்டு பின் தேர்வு நடத்தினால் தேர்வு மீது நம்பிக்கை பிறக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive