Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் தாழாது, தழைத்து நிலை கொள்ளும். - Special Article

"கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு
முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி" என பல்லாண்டுகளாக பெருமை பேசி வந்த நாம் 
தமிழ் அழிந்துவிடுமோ (காலத்தின் கோலமா? நம் மீதுள்ள அவநம்பிக்கையா?) என பயப்படுகிறோம்!?!?

தமிழ் வளர்ந்து கொண்டிருப்பதற்கு எண்ணற்ற, முகமற்ற, பெயரற்ற, அடையாளம் தெரியாத பலர் காரணமேயன்றி, தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் சிலர் அல்ல.

தமிழ் அழியாது. தமிழை யாராலும் அழிக்க இயலாது.
தமிழ் வளரும்.
அதுவே வளரும்.
நிலைகொள்ளும்.
வீறுகொள்ளும்.
ஏற்றம் பெறும்.

தமிழால் கணினியும்,
கணினியால் தமிழும் போட்டிப்போட்டுக்கொண்டு வளர்கின்றன.

1967 லிருந்து இரு மொழிக்கொள்கை.

தமிழ் வளர்ந்ததோ இல்லையோ
ஆங்கிலம் அபாரமாக வளர்ந்தது.

திராவிடம்? என பல பேசிய தமிழ் வியாபாரிகளால் (அரசியல்வாதிகளால்)தமிழ் நலிந்தது என்றாலும் 
அவர்கள் உயர்ந்தனர், தன்னை உயர்த்திக் கொண்டனர் என்பது என்னமோ முழுமையான உண்மை.

தமிழ் தேர்வு ஒரு தாளாக்கினால் தமிழ் அழியும் என ஒரு சாரார் கண்டெடுத்த?! உண்மை.

தமிழ் முதல் தாள் கடினம் என மாணவர்களுக்கு முன்பே கூக்குரலிட்ட தமிழாசிரியர்கள் அதிகம்.

ஆங்கிலம் முதல் தாள் கடினம் என மாணவர்களுக்கு முன்பே கூக்குரலிட்ட ஆங்கில ஆசிரியர்கள் அதிகம்.

கணக்கு கடினம் என மாணவர்களுக்கு முன்பே கூக்குரலிட்ட கணக்கு ஆசிரியர்கள் அதிகம்.

ஆனால் மாநில அளவுல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விழுக்காடு 90 க்கு மேல். 
எவ்வாறு?
என்ன காரணம்?
அது உலகமறிந்த உண்மை.

தமிழ் இலக்கணம் கடினம், அது உனக்குப் புரியாது என மாணவர்கள் அதைக் கற்க இயாலாத சூழ்நிலையை உருவாக்கும் தமிழாசிரியர்களும் உள்ளனர்.
கசப்பான உண்மைதான்.

மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புவரை அடைய வேண்டிய திறன்களை 
அடையாமல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைய வைப்பதில் (பெரும்பாலான) நம்  ஆசிரியர்கள் திறமைசாலிகளே!

எத்தகைய சமுதாயத்தை நாம் உருவாக்குகிறோம்?
தன்னம்பிக்கையுள்ள,
தோல்விகண்டு துவளாத, நன்னெறி தவறாத, ஒழுக்கமுள்ள, திறனுள்ள, கூர்சிந்தனையுள்ள, 
வெற்றிகண்டு கர்வப்படாத, இரக்க மனம் கொண்ட, உதவும் மனப்பான்மை கொண்ட, ஒற்றுமையாக உள்ள, வேற்றுமை பாராட்டாத, சுயசிந்தனை கொண்ட, அலசி ஆராயும் தன்மை கொண்ட, உண்மையின் மீது பற்று கொண்ட, தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டும் தன்மை கொண்ட, . . .
சமுதாயதை உருவாக்குவதில் வெற்றி கண்டு இருக்கிறோமா? 

ஒன்பதாம் வகுப்பு வரை all pass என பச்சை நிறக் கண்ணாடியை அணிந்துகொண்டு தேர்ச்சி அளிக்கப்பட்டது.
அவர்களை திறன் பெற்றவர்களாக உருவாக்கி தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்தோம்.

அனைவருக்கும் கல்வி திட்டம் இதை எதிர்பார்த்து செயல்படுத்தப்படவில்லை.

தவறான புரிதலுக்கு யார் காரணம்?
மாணவர்கள்?
ஆசிரியர்கள்?
பெற்றோர்கள்?
அரசு?
அதிகாரிகள்?

பெரும்பாலான மீத்திறன் மற்றும் ஓரளவு படிக்கும் ஆர்வம் உடையவர்களை நாம் தனியார் பள்ளிகளை நோக்கி மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தோம்.

அரசும் தம் பங்கிற்கு 
RTE சட்டப்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் 25% மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்கியது.

பணக்காரர்களாலும், அரசியல்வாதிகளாலும், அமோகமாக வளர்ச்சி பெற்றிருந்த தனியார் பள்ளிகள் ஊட்டம் பெற்று ஓங்கி வளர்கின்றன.

பத்தாம் வகுப்புவரை தமிழ் படித்து, தாம் நினைத்ததை
தமிழில் பேச, எழுதத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறோம். 

வட்டாட்சியர் அலுவலகங்கள், 
வங்கிகள், 
அஞ்சல் அலுவலகங்கள், 
கிராம நிர்வாக அலுவலகங்கள்,
நகராட்சி (மாநகராட்சி) அலுவலகங்கள், பள்ளிகள், . . . போன்ற பல இடங்களில் விண்ணப்பங்கள் எழுதுதல், நிரப்புதல், இன்னபிறவற்றிக்கு பலர் தவிப்பதையும், உதவி எதிர்பார்ப்பவர்களுக்கு உதவி செய்வதை தன் தொழிலாகக் கொண்ட பலர் இருப்பதையும் நாம் அறிவோம்.

ஒழுக்கம், பெரியோரை மதித்தல், பெரியோர்க்கு கீழ்படிதல், சகிப்புத்தன்மை, சுயநலமின்மை, பரந்தமனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்தளித்தல், . . . போன்றவற்றை மாணவ, மாணவியர்களுக்கு முறையாக, ஒழுங்காக கற்றுக்கொடுக்காமல் 
அவர்களை சுயநலமிகளாகவும், பொதுநலமற்றவர்களாகவும், பந்தயக் குதிரைகளாகவும், பணம் ஒன்றே வாழ்க்கை என்ற எண்ணம் உடையவர்களாகவும், . . . மாற்றி, 
முதியோர் இல்லங்களையும், அனாதை இல்லங்களையும் அதிகம் உருவாகக் காரணமாகியுள்ளோம்.
மறுக்க (மறைக்க) இயலுமா?

அதற்கு தமிழாசிரியர்களும் (மற்ற ஆசிரியர்களும்) ஒரு காரணம் அல்லவா!

அரசுப் பள்ளிகளை மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் புறக்கணித்து
தனியார் பள்ளிகளுக்குச் சென்றதற்கு எல்லோரும் (பொருத்தமான / பொருத்தமற்ற) ஆயிரம் காரணம் சொல்லலாம்.
ஆசிரியர்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை நாம் வசதியாக புறந்தள்ளிவிடுவோம்.

தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 
10, 11, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளில்
அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு ஒன்றும் கேவலமாக இல்லையே!

இன்னும் சொல்லப்போனால்
ஏழ்மை, வறுமை, தெளிவின்மை, வசதியின்மை, வேறுவழியின்மை, பாதுகாப்பின்மை, கிராமச்சூழல், . . . போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களை வைத்துக்கொண்டு இந்த அளவு தேர்ச்சி காட்டியுள்ளன அரசுப்பள்ளிகள்.
அந்த ஆசிரியர்களுக்கு ஒரு Royal salute!

தமிழ் மேல் அக்கறை கொண்டு பலவாறு கருத்துகள் கூறும் நல்லோர் (தமிழ்பேசி, தமிழால் வளர்ந்தோர்)
தொடக்கப்பள்ளிகளில் தமிழ் நடத்த தமிழாசிரியர்களை பணியிலமர்த்த அரசிடம் கோருவதில்லை.

*பலர் ஏற்றுக்கொள்ளாத உண்மை ஒன்று.* 

பழைய பாடத்திட்டமும் தரமானதே.
2005 தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில் உருவானதே.

பலவாறு சிலாகிக்கும் இப்போதைய பாடத்திட்டமும் 2005 தேசிய கல்விக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டதே!

பாடப்பொருள், வினாக்கள் தரம், வினாத்தாள் தரம், . . . ஆகியவற்றில் சிறிதளவு வேறுபட்டது என்பதே உண்மை.

கருவியால் ஒரு செயல் சிறப்படைவதில்லை.
கருவியைப் பயன்படுத்தில் தான் ஒரு செயல் சிறப்படைகிறது.
கருவி எப்படி இருந்தாலும், அதைப் பயன்படுத்துபவராலும் ஒரு செயல் சிறப்படையும்.

ஆசிரியர் ஆசுகளை (குறைகளை) நீக்குபவர். 
நல்வழி காட்டுபவர்.
நன்னெறி புகட்டுபவர்.
நல்ல சமுதாயத்தை உருவாகுபவர்.
சிறந்த குடிமகனை உருவாக்குபவர்.
நாட்டின் எதிர்காலத்தை வகுப்பறையில் உருவாக்குபவர்.
மாணவர்க்கு முன்மாதிரியாக இருப்பவர்.
மாணவ, மாணவியர்களுக்கு நம்பிக்கையாக இருப்பவர்.
நாளைய தலைவனை, தலைமைப் பண்பைப் பெற்றவனை உருவாக்குபவர்
தன்னம்பிக்கையை உருவாக்குபவர்.
ஒழுக்கத்தைக் கற்பிப்பவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக மாண, மாணவிகளுக்கு இரண்டாம் பெற்றோராக இருப்பர்.
(சிலர் மேற்கூறியவாறு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டவர்கள்)

தமிழ் மொழியின்பால் அளவற்ற அன்பு கொண்டவன்.
ஆசிரியர் தொழிலை புனிதமாகக் கருதுபவன்.
சிவ. ரவிகுமார்
9994453649




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive