சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.
சார்வரி ஆண்டு வெண்பாவின் விளக்கத்தை பார்த்தால் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என எச்சரிக்கிறது.
இந்த ஆண்டு ஆண்டு கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு பகவான் தனுசு, மகரம் ராசிகளிலும் சனி பகவான் மகரம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார். ராகு ஆவணி மாதத்தில் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகி ஆண்டு முழுவதும் ரிஷபத்தில் சஞ்சரிப்பார். கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
சார்வரி தமிழ் புத்தாண்டில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
சார்வரி புத்தாண்டு தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்க எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கும் திடீர் பதவி உயர்வு வரும் பணிச்சுமை குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணம் வங்கியில் சேமிப்பீர்கள். நீங்க செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற பலன் தேடி வரும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வசதிகளும் வாய்ப்புகளையும் தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமைந்துள்ளது. மறைமுக எதிர்ப்புகள் வரும் அதை சமாளிப்பீர்கள். பிரச்சார பயணங்களை பாதுகாப்பாக செய்யுங்க. உணவு விசயத்தில கவனமாக இருங்க நல்லதே நடக்கும். அதிகமாக கடன் வாங்கி பிரச்சினையில மாட்டிக்காதீங்க.
அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி
வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ்புத்தாண்டு அதிக சந்தோஷங்களை தரப்போகிறது. நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க. பதவிகள் பட்டங்கள் தேடி வரும். கட்சிப்பணிக்காக வீண் விரைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பணவரவு அதிகமாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கோபத்தோடு பேசாதீர்கள் அது குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்க தியானம் பண்ணுங்க. இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவும் சனியும் ராஜயோகத்தை தரப்போகிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். அவ்வப்போது சின்னச் சின்ன குழப்பங்கள் வந்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் கிடைக்கும். சுக்கிரனைப் போன்றவர் ராகு. ராகுவைப் போல அதிகமாக கொடுப்பவர் யாருமில்லை. நல்லா சாப்பிடுங்க நல்லா அனுபவிங்க. வீட்டில் அடிக்கடி மகாலட்சுமி பூஜை பண்ணுங்க. பெருமாளை நினைத்து வழிபடுங்க.
அதிர்ஷ்டமான மாதங்கள்: மாசி, பங்குனி
வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி
மிதுனம்
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. அஷ்டம சனி ஆட்டி வைக்கும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்க வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமை பளிச்சிடும். சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். எதிர்பாலின நட்புக்களிடம் கவனமாக இருங்க இல்லாவிட்டால் செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். பேச்சில் கவனமாக இருங்க. வாக்கு கொடுக்காதீங்க காப்பாற்ற முடியாம போயிரும். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. கொஞ்சமாவது சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும். அவசரகால நெருக்கடிகள் தீரும்
அதிர்ஷ்டமான மாதங்கள்: ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை
வணங்க வேண்டிய தெய்வம் : துர்க்கை
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்
கடகம்
கடகம் ராசிக்காரர்ளுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. அதிகார பதவிகள் தேடி வரும். உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை தேடி வரும். அரசு அதிகாரிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நிறைய சம்பளத்துடன் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல் விலகும். குரு பார்வையால் இந்த ஆண்டு குதூகலமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். திருமண தடை நீங்கும் விரும்பிய வாழ்க்கை தேடி வரும். ஆண்டு தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மொத்தத்தில் சார்வரி தமிழ் புத்தாண்டு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: புரட்டாசி, மார்கழி, பங்குனி
வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்
அதிர்ஷ்ட நாள் : திங்கள்
சிம்மம்
உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பிறக்கிறது. உங்களுக்கு சங்கடங்களை விட சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீங்க. வேலையினால் நல்ல வருமானம் வரும். கடன் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கடன் நிறைய கிடைக்கும். வங்கி கடன் உதவி கிடைக்கும். கடன் கிடைக்கிறதே என்பதற்காக நீங்க வாங்காதீங்க. பொருளாதார மேன்மை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் வரும். பெரிய பதவிகள் தேடி வரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் வரும். சிலருக்கு விரும்பி இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க அமைதியாக இருந்தாலே போது பிரச்சினைகள் வர வாய்ப்பே இல்லை. விட்டுக்கொடுத்து போங்க எந்த பிரச்சினையும் வராது. வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சார்வரி வருடம் சிம்ம ராசிக்காரர்களும் சந்தோஷங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆவணி, தை
வணங்க வேண்டிய தெய்வம் : சூரியன்
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். பெண்களுக்கு பணம் நகை சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்க திறமை பளிச்சிடும் அதுவே உங்க புரமோசனுக்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். உங்க ஆரோக்கியம் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். உங்க வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும். குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் மன இருக்கம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலை இருக்கும். சிலருக்கு திருமணம் கை கூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வருமானம் வரும். கடன்களை கொடுத்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. பணப்புழக்கம் அதிகமாகும் பணம் ஒரு பக்கம் வந்தாலும் செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சார்வரி புத்தாண்டு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆனி
வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்
அதிர்ஷ்ட நாள் : புதன்
துலாம்
சார்வரி தமிழ் புத்தாண்டில் நிறைய சவால்களை சந்திப்பீர்கள். துணிச்சலாக நீங்க எடுக்கப்போகிற முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். யாரிடமும் வம்பு வழக்குகளோ வீண் வாக்குவாதங்களோ வேண்டாம். இந்த ஆண்டு சொத்துக்களை வாங்குவீர்கள் வீடு வாங்கும் யோகமும் தேடி வரப்போகிறது. சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும் சம்பள உயர்வு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வருகிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில நேரங்களில் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் கசப்பான உணர்வுகளை சந்திப்பீர்கள். அது சில மாதங்களில் நீங்கும். வியாபாரத்தில் பண வரவு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.
அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
வணங்க வேண்டிய தெய்வம் : லட்சுமி நரசிம்மர்
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் கவனமாக இருங்க. விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.
அடிப்படை வசதிகள் பெருகும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ரொம்ப சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். பணம் சேமிப்பு அதிகமாகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நினைத்த காரியம் நடக்கும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். பேச்சில் கோபத்தை குறைங்க நல்லதே நடக்கும். அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை, பங்குனி வணங்க வேண்டிய தெய்வம் : கால பைரவர் அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இந்த சார்வரி புது வருடம் உங்க ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த பொறுப்பையும் யாரை நம்பியும் ஒப்படைக்காதீங்க. ஏழரை சனி காலம் என்பதால் ஒருவித பதற்றத்துடனேயே இருப்பீங்க. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு அவதிப்பட்டீங்க. இனி உங்க கோபம் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும் சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும் சில நேரங்களில் எதிர்பாராத பணமும் வரும். எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். நட்பு வட்டம் அதிகரிக்கும். படிப்படியாக உங்க பிரச்சினைகள் தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சாதனைகள் நிகழ்த்தப் போகும் ஆண்டாக சார்வரி புது வருடம் பிறக்கப் போகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான், ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை
மகரம்
இந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும். உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. ஏழரை சனி காலம் என்பதால் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் நிதானமாக இருங்கள்.
சிலருக்கு வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். சார்வரி தமிழ் புது வருடம் சந்தோஷங்களை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை
கும்பம்
சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. என்னதான் ஏழரை சனியில் விரைய சனி, விரைய குரு என்றாலும் உங்களுக்கு லாபங்களை அள்ளித்தரப்போகிறது. ராஜயோகத்தை தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய் பாதிப்பு பற்றிய அச்சம் நீங்கும். ஏழரை சனியால் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அது விரைவில் தீரும்.
அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை, மார்கழி
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை
மீனம்
உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கௌரவ பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும்.
தை மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளுக்காக சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இந்த சார்வரி புது வருடம் சாதனைகளை தரப்போகும் ஆண்டாக அமைந்துள்ளது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆனி, ஆவணி, மார்கழி, தை
வணங்க வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...