++ ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க திட்டம் விரைவில் அறிவிப்பு வெளியாகிறது ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
images%2528126%2529

கரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோ சனை நடத்தினார். அப்போது ஊரடங்கை மேலும் 2 வாரங் களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் வலியுறுத்தினர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இன்று அல்லது நாளை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவி லும் வேகமாகப் பரவி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 24-ம் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக் களுக்கு உரையாற்றினார். அப் போது கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல் செய் யப்படும் என்று பிரதமர் அறிவித் தார். அதன்படி, மார்ச் 25 முதல் ஊர டங்கு அமலில் உள்ளது. இந்த ஊர டங்கு வரும் 14-ம் தேதி நிறைவடை கிறது. சில மாநில அரசுகள் முன் னெச்சரிக்கையாக வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.அடுத்த 4 வாரங்கள் முக்கியம்இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதில் பிரதமர் நேரந்திர மோடி பேசியதாவது:
நாட்டு மக்களின் உயிர்களை காப்பதில் மத்திய அரசு முனைப் புடன் செயல்படுகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய போரை தொடுத்துள்ளோம். இதில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற் றுள்ளனர். இந்த போரில் குடி மக்கள் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசின் வழிகாட்டுதலை கண்டிப் புடன் பின்பற்ற வேண்டும்.மக்களின் உயிர்களை காப் பாற்றவே ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ளது. 
அடுத்த 4 வாரங்கள் மிகமும் முக்கியானது. இந்த காலத் தில் நாம் எடுக்கும் நடவடிக்கை களை பொறுத்தே வைரஸ் பரவலை வெற்றிகரமாக தடுக்க முடியும். நாம் குழுவாக செயல்பட்டு சவாலை எதிர்கொள்ள வேண்டும்.நம்மிடம் தேவையான மருந்து கள் கையிருப்பில் உள்ளன. மருந்து களை பதுக்குவோர், கள்ளச் சந்தை யில் விற்போர் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். சில இடங் களில் மருத்துவர்கள், செவிலியர் கள், சுகாதார ஊழியர்கள் மீது தாக்கு தல் நடத்தப்படுகின்றன. சில இடங் களில் வடகிழக்கு, காஷ்மீர் மாணவ, மாணவியர் மீது தாக்குதல் நடத்தப் படுகின்றன. இவற்றை வன்மையாக கண்டிக்கிறேன்.நாடு முழுவதும் சுகாதார கட்ட மைப்பை மேம்படுத்த வேண்டும். 'டெலி மெடிசின்' திட்டத்துக்கு முக் கியத்துவம் அளிக்க வேண்டும். விவ சாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். குறிப்பாக காய்கறிகள் வீடு களின் வாசலுக்கே சென்றடைய வேண்டும்.
24 மணி நேரமும் அழைக்கலாம்
தென்கொரியா, சிங்கப்பூர் உள் ளிட்ட நாடுகள், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை செயலிகள் மூலம் கண்காணிக்கின்றன. இதே நடைமுறையை நாமும் பின்பற்ற வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப் படுத்த சமூக விலகலை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மாநில முதல்வர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். 24 மணி நேரமும் உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். இரவு, பகல்பார்க்காமல் எந்த நேரத்திலும் ஆலோசனைகளை கூறலாம். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மத்திய, மாநில அரசுகள் தோளோடு தோள் கொடுத்து போரிட வேண்டும்.ஊரடங்கை மேலும் 2 வாரங் களுக்கு நீட்டிப்பதில் மாநிலங்களி டையே ஒருமித்த கருத்து உள்ளது. மனித உயிர்களும் முக்கியம். பொரு ளாதாரமும் முக்கியம். இறக்கு மதியை சார்ந்திருக்காமல் அனைத்து துறைகளிலும் சுயசார் புடையவர்களாக இருக்க வேண் டும். நாட்டை பொருளாதார வல்லர சாக மாற்ற வேண்டும்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பஞ்சாப், ஒடிசா, டெல்லி, மகா ராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங் கானா, உத்தர பிரதேசம், உத்தரா கண்ட் உட்பட சுமார் 12-க்கும் மேற் பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மேலும் 2 வாரங்களுக்கு ஊர டங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பிரதமரிடம் பேசும்போது, "ஊரடங் கால் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பது உண்மைதான். ஆனால் வைரஸ் பரவினால்அதைவிட பேராபத்து ஏற்படும். இந்த வைரஸை முளையி லேயே கிள்ளி எளிய வேண்டும். அதிவிரைவு பரிசோதனைக்கான கருவிகளை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கரோனா வைரஸ் பரிசோதனைக் கான ஆய்வகங்களின் எண்ணிக் கையைஅதிகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது,"மாநில அரசுகள் மட்டும் ஊரடங்கை அமல் படுத்தினால் எவ்வித பயனும் இல்லை. தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கை விலக்கினால் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்" என்று தெரிவித்தார்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசும்போது, "ஊரடங்கை நீட்டிக்க நானும் ஆதரவு அளிக் கிறேன். அதேநேரம் தானியங்களை அறுவடை செய்து விற்பனை செய்ய விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர். இதற்கும் மோடியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதே நேரம் பொருளாதாரத்தை ஊக்கு விக்க ஊரடங்கில் சில தளர்வு களும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். வைரஸ்தொற்று குறைவாக உள்ள பகுதி களில் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படலாம். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக் காட்சியில் உரையாற்றக்கூடும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கு நீட்டிக்கப்படும் என் பதை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உறுதிப்படுத்தியுள்ளார். ஆலோசனைகூட்டத்துக்குப் பிறகு அவர் ட்விட்டரில் வெளி யிட்ட பதிவில், "ஊரடங்கை முன்கூட் டியே அமல்படுத்தியதால் இந்தியா வில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு மிகவும் சரி யானது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 4 மாநிலங்களில் நீட்டிப்பு
ஒடிசா, பஞ்சாபில் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அம்மாநில அரசுகள் ஏற்கெ னவே அறிவித்திருந்தன. இந்நிலை யில் மகாராஷ்டரா, கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்க அரசு களும் வரும் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக நேற்று அறிவித்தன. 4 மாநிலங்களில் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...