++ 30 நிமிடத்தில் முடிவு தெரியும் - தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது ரேபிட் டெஸ்ட்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
lab-work-on-tests-of-coronavirus01-1586514110

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத் ஊரடங்கு நடவடிக்கை அமலப்டுத்தப்பட்டள்ளது.
ஆனாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தமிழகம் தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2வது இடத்தில் உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம் ஆகும். இந்த நோய் தொற்று யாருக்கு இருக்கிறது என்பதை கண்டறிந்தால் மட்டுமே சிசிக்சை அளிக்க முடியும்.  சீனா கண்டுபிடித்த கிட்  மற்றவர்களிடம் இருந்து பிரித்து அவர்களுக்கு சிகிச்சைஅளிக்க முடியும். தற்போது வரை தமிழகத்தில் 19 பரிசோதனை கூடங்களே உள்ளன இங்கு நாள் ஒன்று 700 பரிசோதனைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முடிவுகளை அறிய கால தாமதம் ஆகிறது. இந்நிலையல் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய சீனா கண்டுபிடித்த ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கிட் மூலம் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அந்த வைரஸின் Antigenஐ எதிர்க்க, அவர் உடலில் எதிர்ப்புரதம் (Antibody) உருவாகும். அதாவது IgM, IgG என்ற ஆன்டிபாடீஸ் உருவாகும். ரேபிட் பரிசோதனை கருவியில் அந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பரிசோதனைக்கு நோயாளியின் ரத்தம், பிளாஸ்மா மற்றும் சீரம் ஆகியன மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றது. அந்த மாதிரிகளில் IgM, IgG ஆன்டிபாடீஸ் இருப்பின், அந்த பரிசோதனைப் கருவியில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறம் மாறும். இந்த நிறப் பகுப்பியல் சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

வெறும் 30 நிமிடங்களில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஒருவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி இருந்தால் மட்டுமே பாசிட்டிவ் என்று என்பதும் கூடுதல் தகவல். எனினும் தற்போதைய சூழலில் நிறைய மக்களுக்கு குறைந்த நேரத்தில் பரிசோதனை செய்துவிடலாம். அறிகுறி உள்ளவர், இல்லாதவர்கள், தொற்று உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்தப் பரிசோதனையைச் செய்ய முடியும்.

இன்று முதல் சோதனை

தற்போதைய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் அறிகுறி உள்ளவர்களுத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே காலதாமதம் ஆகிறது. உடனே பலருக்கு பரிசோதனை நடத்த ரேபிட் டெஸ்ட் கிட் மிகவும் அவசியம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் தான் தமிழக அரசு சுமார் 4 லட்சம் கிட் ஆர்டர் கொடுத்துள்ளது. தற்போது 50 ஆயிரம் கிட்டுகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்த கிட்டுகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...