செய்தி வெளியீடு
தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க எந்த தடையும் இல்லை , வழிமுறைகளில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விளக்கம்
சுனாமி , பெரு வெள்ளம் , ஒகி புயல் , வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள் , தினசரி உபயோகப் பொருட்கள் , வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது . அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர , நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
அப்போதைய சூழ்நிலையில் , பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது . ஆனால் தற்போது , இந்த பேரிடர் , கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது , இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம் . இந்தத் தொற்று யாரிடம் உள்ளது , அது எப்போது , யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில் , நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான் , கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் , இயல்பான நகர்வுகளுக்கும் , தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் , தன்னார்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் , தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும் , நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் , அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கவும் , முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் . எனவே , புயல் , வெள்ளம் , வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால் , நோய்த் தொற்று தான் அதிகமாகும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள் .
அதனால் தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும் , அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ , மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ , மண்டல அலுவலர்களிடமோ , நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ , பேரூராட்சியாக இருந்தால் , செயல் அலுவலரிடமோ , ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் , வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம் .
மேலும் , இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம் . இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் , தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் , சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு , அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...