சதுரங்க விளையாட்டானது ஒரு பழைமை வாய்ந்த விளையாட்டாகும்.
இவ் விளையாட்டு இன்றும் சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருவதுடன் இதை விளையாடுவதால் பல நன்மைகளை போட்டியாளர்கள் (குறிப்பாக இளம் சிறார்கள்) பெற்றுக்கொள்வதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1. மூளை வளர்ச்சி:
சதுரங்கம் பயிலும் பிள்ளைகளது மூளை வளர்ச்சியானது ஏனையவர்களை விட விரைவாக இருக்கிறது. இது Dendrites என்கின்ற மூளைப்பகுதியின் வளர்ச்சியை தூண்டுவதாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
2. IQ மட்டத்தை அதிரிக்கின்றது.
சில ஆய்வுகள் chess விளையாடும் மாணவர்களின் IQ மட்டமானது, ஏனைய மாணவர்ளின் IQ மட்டத்தை விட அதிகமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
3.படைப்பாற்றலை (creativity) அதிகரிக்கின்றது
இவ் விளையாட்டு சிந்திக்கும் ஆற்றலை அதிகரித்து பல கோணங்களில் ஆராயும் திறனை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றலை அதிகரிக்கின்றது.
4.தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கின்றது.
சதுரங்க விளையாட்டின் போது குறிப்பிட்ட நேர இடைவெளியில் யோசித்து பல தீர்மானங்களை எடுக்க நேரிடும். இந்த ஆற்றல் பின்னர் வாழ்கையில் சந்திக்கும் சவால்களை குறித்தான தீர்மானங்ளை எடுக்க உதவும்.
5. ஞாபக சக்தியை அதிகரித்தல்.
சதுரங்கம் பயிலும் போது பல நுணுக்கங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள பழகுவதால் காலப்போக்கில் ஞாபகசக்தி அதிகரிக்க உதவி புரிகின்றது.
6. தலைமைத்துவ பண்பை அதிகரித்தல்.
தீர்மானம் மேற்கொள்ளும் திறனுடன், பல சதுரங்க சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதன் விளைவாக தலைமை தாங்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது.
இதன் காரணமாகத்தான் முன்னாள் சோவியத் யூனியனில் சதுரங்கத்தையும் ஒரு பாடமாக கற்பித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...