NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆண்களை அதிகம் குறி வைக்கும் கொரோனா - காரணம் என்ன ? - Video

கொரோனா வைரஸ் பாதிப்பால்
பெண்களை விட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

தற்போது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் குறித்து ஆய்வாளர்களுக்கு இன்னமும் முழுமையான விவரங்கள் தெரியாது.
ஆனால் இதுவரை சீனா, தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8 சதவிகிதம் பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் 1.7 சதவிகிதம் பேரே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவிலும் உயிரிழந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. 
இப்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆண்கள் அதிக அளவில் உயிரிழப்பதற்கு அவர்கள் மத்தியில் இருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், மருத்துவமனைக்கு செல்ல காலதாமதம் செய்வது,
கைகழுவும் பழக்கத்தை பெண்களை போல் தீவிரமாக பின்பற்றாதது என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த காரணங்களையும் தாண்டி, அபாயங்களை மேற்கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு இயல்பிலேயே ஆற்றல் அதிகம் இருப்பதுதான் உண்மையான காரணம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
பெண்கள் ஆண்களை விட திடமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. உலகெங்கும் நூறு வயதை தாண்டி வாழ்பவர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்கள்.
அதுவும் 110 வயதை எட்டுபவர்களில் 95 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு பதில் பெண்களின் குரோமோசோம்களில் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பெண்களின் டிஎன்ஏவில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்களின் டிஎன்ஏவில் ஒரு X குரோமோசோம்தான் இருக்கிறது. இந்த X குரோமோசோம்தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்கிறது. எனவே ஒரே ஒரு X குரோமோசோமுடன் இருக்கும் ஆண்களைவிட இரண்டு X குரோமோசோம்களை கொண்ட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயல்பிலேயே அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
அதேபோல் பெண்களின் ஹார்மோன்களும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்களிடம் அதிக அளவு காணப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஆண்களிடம் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் நோய் எதிர்ப்பு திறனை தடுப்பதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உடலளவில் பார்ப்பதற்கு ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்களாக காட்சியளித்தாலும் உண்மையில், கொரோனா போன்ற தொற்று நோய்களை மேற்கொள்வதிலும், அவர்களே வலிமையானவர்களாக இருக்கிறார்கள் என்பதே ஆய்வுகள் கூறும் முடிவாக இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive