Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

202005251545169284_TN-Govt-on-Tenth-Public-exams_SECVPF

தமிழகத்தில் ஜூன் 15ஆம் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

*  கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


* பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி விடைத்தாள்களை தாராள மனதுடன் திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட கூடியது முதல் திட்டம் எனச் சொல்லப்படுகிறது.


* நான்காவது முறையாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு தேர்வை தள்ளி வைப்பது இரண்டாவது திட்டம் எனக் கூறப்படுகிறது.


* மூன்றாவது திட்டம், பொதுத்தேர்வை நடத்தாமல் , காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்வது என தெரிகிறது.


* இந்த மூன்று திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் திட்டத்தை, கல்வித்துறை செயல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக, கடந்த 17ஆம் தேதி தந்தி தொலைகாட்சி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments