எமிஸ் :
மேல்நிலைப்பள்ளிகளில்
கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) +2 பயின்ற மாணவ மாணவிகளுக்கு
மாற்றுச்சான்றிதழ் ( Transfer certificate ) வழங்கியிருப்பீர்கள் என்பதால் ,
அம்மாணவர்களது விபரங்களை எமிஸ் இணையதளத்தில் students -- > students TC
details . +2 பயின்ற மாணவர்களது பெயருக்கு எதிரே உள்ள யை கிளிக் செய்து ,
terminal class என்பதை தேர்வு செய்து , சார்ந்த மாணவனின் விபரத்தை common
pool க்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. பிற வகுப்புகளிலும் மாற்றுச்
சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு , மாற்றுச் சான்றிதழ் எமிஸ்
தளத்தில் தயார் செய்தபின் , அம்மாணவரது விபரத்தையும் common pool ற்கு
அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
துவக்க
நடுநிலை / உயர்நிலைப் பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பயின்ற
மாணவர்களுக்கும் / பள்ளி மாறுதல் காரணமாக வேறு பள்ளிக்கு செல்லும்
மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழ் தயார் செய்தபின் , அம்மாணவரது விபரத்தை
common pool ற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பணிகளை முடித்த
பின்பே , தங்கள் பள்ளியில் பயிலும் பிற வகுப்பு மாணவர்களுக்கு எமிஸ்
இணையதளத்தில் அடுத்த உயர் வகுப்பிற்கு தேர்ச்சி ( promotion ) வழங்கவும் ,
அதனைத்தொடர்ந்து புதிதாக சேர்க்கை செய்யப்படும் மாணவர்களின் விவரங்களை
பதிவேற்றம் செய்வதற்குமான பணிகளை மேற்கொள்ள இயலுமென அனைத்து வகை பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. தேர்ச்சி வழங்குவதற்கான
வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேதி குறித்த விவரம் பின்னர்
தெரிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...