++ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

images%2528146%2529


 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமையும், பிளஸ் 1 முடிவுகள் வியாழக்கிழமையும் வெளியிடப்படவுள்ளன.


மறுகூட்டலுக்கு நவ.3, 4 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றுக்கான துணைத்தோ்வுகள் கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை காலை 11 மணிக்கும், பிளஸ் 2 முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும், பிளஸ் 1 முடிவுகள் வியாழக்கிழமை (அக்.29) காலை 11 மணிக்கும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படவுள்ளன.


தோ்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே தோ்வெண், பிறந்த தேதியை பதிவு செய்து தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விடைத்தாள்- மறுகூட்டல்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு நவ.3, 4-ஆம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.


கட்டணம் எவ்வளவு?: பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு பாடத்துக்கு ரூ.205; பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறுவதற்கு பாடத்துக்கு ரூ.275, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம்.


முன்னரே முடிவு செய்து...: பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வா்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னா் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவா்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னா் விண்ணப்பிக்க இயலும்.


விடைத்தாளின் நகல்கோரி விண்ணப்பிப்போா் அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.


அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தோ்வா்கள் விடைத்தாளின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குச் செல்லும் தனித்தோ்வா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...