மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: முழு அட்டவணை வெளியீடு

596380

எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ் உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் மாதத்தில் தொடங்குகின்றன. இதற்கான தேதிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன. எனினும் மருத்துவத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வுத் தேதிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நவம்பர் மாதத்தில் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. டி.எம்., எம்.சி.எச்., ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இறுதியாண்டுத் தேர்வுகளும், எம்.டி., எம்எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகளும் நவம்பர் 4-ம் தேதி தொடங்குகின்றன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற எம்டி, எம்எஸ் தேர்வுகளைக் கரோனாவால் எழுத முடியாதவர்களுக்கு இம்முறை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

அதேபோல எம்பிபிஎஸ், எம்டிஎஸ், முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 23-ல் தொடங்கவுள்ளன. பிடிஎஸ் இறுதியாண்டுத் தேர்வுகள் நவம்பர் 24-ம் தேதி முதல் நடைபெறும். இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன.

பிஎஸ்சி நர்சிங் மற்றும் எம்எஸ்சி நர்சிங் தேர்வுகள் முறையே டிசம்பர் 14 மற்றும் 21-ம் தேதிகளில் தொடங்குகின்றன. போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங் தேர்வும், பி.ஃபார்ம் இறுதித் தேர்வும் டிசம்பர் 1-ம் தேதியன்று தொடங்குகின்றன.

இதேபோன்று பிபிடி, பிஓடி, இளநிலை மருத்துவம் சார் படிப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 7-ம் தேதியில் இருந்தும், அவற்றில் முதுநிலைப் படிப்புகளான எம்பிடி, எம்ஓடி படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 23-ம் தேதியிலிருந்தும் நடைபெறும்''.

இவ்வாறு சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive