Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

முதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை: பல்கலைக்கழக மானியக் குழு வழங்குகிறது.




 முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின மாணவர்கள் மற்றும் ரேங்க் வென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவித்தொகை வழங்கி வருகிறது.

அதன்படி, 2020-21-ம் ஆண்டுக்கான உதவித்தொகை திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண் இரட்டையர்

முதுநிலை பட்டப்படிப்பில், ஒற்றை பெண் பட்டதாரிகளுக்கு முதுநிலை இந்திரா காந்தி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், இரட்டையர்களாக பிறந்த பெண் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முழுநேரமாக முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். மொத்தம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36,200 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பட்டியலின மாணவர்கள்

ஆண்டுதோறும் உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது.அதிலும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் பட்டியலின் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கைதாண்டவில்லை.. இவர்களில்பொறியியல், தொழில்நுட்பம்,மருந்தியல், மேலாண்மை உள்ளிட்ட தொழில்துறை படிப்புகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்.

ஆண்டுதோறும் 1,000 பேருக்கு

இந்நிலையில் தொழில்துறை படிப்புகளில் முதுநிலை அளவில் படித்துவரும் பட்டியலின மாணவர்களில் 1,000 பேருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் எம்.டெக்,எம்.இ. படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.7,800, இதர தொழிற்துறை படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.4,500 என 2 முதல் 3 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

ரேங்க் பெற்ற பட்டதாரிகள்

அதேபோல், பல்கலைக்கழகரேங்க் வென்ற மாணவர்களுக்கான முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

60 சதவீதம் மதிப்பெண்

அதன்படி, உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், மொழி படிப்புகள் ஆகிய பாடப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் அல்லது இரண்டாம் ரேங்க் பெற்றவராக இருத்தல் அவசியம். அதிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர் களுக்கு மாதம் ரூ.3,100 என 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித் தொகைகளைப் பெற www.scholarship.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க அக்.30 கடைசி நாளாகும்

ஆதார் அட்டையின் நகல், மாணவரின் புகைப்படம், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 (அல்லது அதற்கு இணையான படிப்பு), இளநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் சான்றிதழ், நடப்பு ஆண்டு கல்விக் கட்டண ரசீது, ஒற்றை பெண் பட்டதாரி எனில் அதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், பட்டியலின மாணவர்கள் எனில் சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive