Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நவம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு



*காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு



* நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு.


551 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிநாடுநர்கள் பட்டியல் , பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது . இப்பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் EMIS Online கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது . மேலும் நேரடிநியமனம் கலந்தாய்வு சார்ந்து இணைப்பிலுள்ள படிவத்தில் முதன்மைக் கல்வி அலுவலகக் கோப்பு எண் / முதன்மைக் கல்வி அலுவலரின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து உடன் மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கான பணிநாடுநர்களின் வீட்டு முகவரிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ளவும் அறிவுருத்தல்.



DSE - PET Counselling Proceedings - Download here...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive