NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2GB free data - முதல்வர் பழனிச்சாமி உத்தரவு.

FB_IMG_1610253569461
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை மாண்புமிகு அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது . மேலும் , கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு , அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் , கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன . இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக , அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் , பாலிடெக்னிக் கல்லூரிகள் , பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு ( 2 GB Data ) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக , விலையில்லா தரவு அட்டைகள் ( Data Cards ) வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன் . இக்கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . 

K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive