'0" பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற (C' மற்றும் 'D' பிரிவு ஊதிய விதங்கள் (சாதாரண நிலை) இந்த அரசாணையின் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன) மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் முன்னாள் கிராம பணியமைப்பு முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உட்பட அனைத்து 'C மற்றும் 'D' பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்துவகை தனி ஓய்வூதியதாரர்கள் (Ad-hoc Pensioners of all categories) (அதாவது 1-10-2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2,000- பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள் துப்புரவுப் பணியாளர்கள் ! துப்புரவாளர்கள், தோட்டக் காவலர் வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உட்பட) மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் அதாவது ஓய்வூதியதாரர்கள் எந்த பணியாளர் பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும் பணியாளர்கள் பணியிடை மரணம் அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) வழங்கி அரசு ஆணையிடுகிறது
2. இவ்வாணை தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும் இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, 06-01-2020 நாளன்றோ அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் 06-01-2020 நாளன்றோ அதற்குப் பின்னர் பணியிலிருக்கையில் இறக்கும் 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களின் குடும்பங்களுக்கும் அனுமதிக்கத்தக்கதல்ல
3. 01-10-2017 முதல் 05-01-2020 வரையிலான கால அளவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ! பணியிலிருக்கையில் இறந்துவிட்டவர்களைப் பொருத்தவரையில் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்டுள்ள அரசாணையின்படி அவர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்பட்டிருக்குமேயாயின் அவர்கள் இந்தப் பொங்கல் பரிசுத்தொகையை பெற தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள் இதற்காக, இந்த ஓய்வூதியதாரர்களுக்குத் தொகை வழங்குவதற்குமுன், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தொகை வழங்கப்படவில்லை என்பது குறித்த சான்றிதழ் கொள்ளப்படுகின்றனர் பெறுமாறு ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகள் கேட்டுக் இந்த ஆணை பின்வரும் வகையிலான ஓய்வூதியதாரர்களுக்குப் பொருந்தாது.
மேலும் விரிவான செய்திகளுக்கு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...