NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆலோசனை!

20210201_003016

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு சுகாதாரத்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 9, 11ம் வகுப்புகளுக்கு கடந்த பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மீதமுள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் போதிலும், கொரோனா பரவல் இல்லை என்பது பரிசோதனை மற்றும் ஆய்வுகளின் மூலம் தெளிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கான வரையறை திட்டம் தற்போது தயார் செய்யப்பட்டு சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் தான் இது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive