Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 


 

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள் , 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிகல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு உயர்கல்வியில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு மாநில திட்ட இயக்ககம் ( ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ) ( SSA ) மூலம் உடற்கல்வித்துறை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


 எனவே , மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் , அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிடவும் , பள்ளிகளில் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடவும் , இதற்கான ஒப்புகை சீட்டினை பெற்று இருப்புகோப்பு பராமரிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive