Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திரைப்பட கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

 
 
 
 
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர மே 28 வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.

இக்கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்ப கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் மே 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பட்டப்படிப்புுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive