![]() |
| மைக்கேல் பெல்ப்ஸ் |
""" Learning is a journey,not a race.""
கற்றல் என்பது ஓட்டப்போட்டி அல்ல, ஒரு பயணம்."
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
மக்கள் சமுதாயத்தில் புரட்சிகள் உண்டாகும் போது, அந்தச் சமுதாயம் பழையன களைந்து புது வாழ்வு தொடங்க ஏதுவாகிறது - ரூசோ
பொது அறிவு :
01. தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?
1987 ஆம் ஆண்டு
02. இந்தியாவில் உப்பு நீர் அதிகம் ஏரிகள் உள்ள மாநிலம் எது?
ராஜஸ்தான் (Rajasthan)
English words :
economy. - பொருளாதாரம்
genuine - நேர்மையான
அறிவியல் களஞ்சியம் :
"முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.
மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது."
ஜூன் 30
நீதிக்கதை
மனத்திருப்தி
ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.
ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.
அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.
கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது.“ ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.
வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.
தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் “அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.” என்றார்.
“இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.
“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” என்றார் கல்தச்சர்.
அதற்கு “ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்றார் வழிப்போக்கர்.
தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”.
நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...