2026 - 2027 கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு பொது தேர்வு, 2 முறை நடத்தப்படும் என, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் பிப்ரவரியில் முதல் தேர்வும், மே மாதத்தில் 2வது தேர்வும் நடத்தப்பட உள்ளன. முதல் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். அதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியாகும். மே மாதத்தில் நடக்கும் 2வது தேர்வை விரும்பும் மாணவர்கள் எழுதலாம். சில பாடங்களில் மட்டும் மறு தேர்வு எழுதி, மதிப்பெண்களை அதிகரித்து கொள்ளலாம். இதன் முடிவுகள் ஜூனில் வெளியாகும். எனினும், செய்முறை தேர்வு ஒரு முறைதான் நடத்தப்படும். இந்த மாற்றத்தை பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...