சென்னை, ஜூன் 28-
'தினமலர்' செய்தியை தொடர்ந்து, ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 1,138 பள்ளிகளில், 1,177 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை யால், இப்பள்ளிகளில் நான்கு ஆண்டுகளில், ஆண்டுகளில், 20 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
இதுகுறித்து, நம் நாளி 'தேதி தழில், சுடந்த, 24ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை, தொகுப்பூதிய முறையில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டங்களில் செயல்படும்.ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, தொகுப்பூதிய முறையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பதவி உயர்வு வாயிலாக பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் 18,000; பட்டதாரி ஆசிரியருக்கு 15,000; இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாய் தொகுப்பூதிய மாக வழங்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...