மத்திய அரசின் தனியார் மயம், புதிய ஓய்வூதிய திட்டம், தேசிய கல்விக் கொள்கைகளுக்கு எதிராக ஜூலை 9 ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ ஜியோ பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஹிமாச்சலபிரதேச மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியபோது, பி.எப்.ஆர், டி.ஏ., நிதியத்தில் செலுத்திய நிதியை தர மத்திய அரசு மறுத்துவிட்டது. ராஜஸ்தான் பழைய திட்டத்தை ஆய்வு என்ற முறையில் ரத்து செய்ய முயற்சிக்கிறது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பெற பி.எப்.ஆர்.டி.ஏ., ஆணையத்தை ரத்து செய்வதே வழி.
பல மாநிலங்களில் 12 மணி நேர வேலை நிறுத்தம் அமல்படுத்த காரணம், மத்திய அரசின் தாராளமயம், தனியார் மயமே. இதற்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 20 கோடி பேர் பங்கேற்கும் அகில இந்திய வேலை நிறுத்தம் ஜூலை 9ல் நடக்கிறது. மே 19ல் நடந்த ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுப்படி இதில் ஜாக்டோ ஜியோவும் பங்கேற்கிறது.
இந்தியன் ரயில்வே, சாலை போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம் உட்பட முக்கிய துறைகளை தனியார்மயமாக்கக் கூடாது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை விலைக்குறியீடு, வழக்கமான திருத்தத்துடன் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசின் காலியிடங்களை நிரப்புதல், காலாவதி இடங்களை புதுப்பிப்பதற்காக இப்போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...