Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

B.Ed மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்

 screenshot-2025-06-21-082003-2025-06-21-08-30-02 

பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்; ஜூலை 18-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

B.ED ADMISSIONS 2025: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் 2025-26ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு, விண்ணப்ப பதிவு தொடங்கியது. இந்த ஆண்டு முதல் இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் 2025-26 ஆம் கல்வியாண்டில், இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்பதிவு, ஜூன் 20 தொடங்கி ஜூலை 9-ம் தேதி வரையில் நடைபெறும். விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasain என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

ஜூலை 18-ம் தேதி மாணவர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, ஜூலை 21 முதல் 25-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து, மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு ஆணை ஜூலை 28-ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை, தங்கள் உள்நுழைவு ஐடி மூலம் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். இதன் பின்னர், ஆகஸ்டு 6 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு:

பி.எட். தமிழ் (B.Ed. Tamil)
பி.எட். ஆங்கிலம் (B.Ed. English)
பி.எட். கணிதவியல் (B.Ed. Mathematics
பி.எட். இயற்பியல் ( B.Ed. Physical Science - Physics)
பி.எட். வேதியியல் (B.Ed. Physical Science - Chemistry)
பி.எட். உயிரியல் (B.Ed. Biological Science - Botany)
பி.எட். விலங்கியல் (B.Ed. Biological Science - Zoology)
பி.எட்.வரலாறு (B.Ed. History)
பி.எட்.புவியியல் (B.Ed. Geography)
பி.எட். கணினி அறிவியல் (B.Ed. Computer Science)
பி.எட். ஹோம் சயின்ஸ் (B.Ed. Home Science)
பி.எட்.பொருளாதாரம் (B.Ed. Economics)
பி.எட். வணிகம் (B.Ed. Commerce)
தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்கள் உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive