Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

G.O 792 - தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் 2025 அறிவிப்பு - அரசாணை வெளியீடு

  

G.O 792 - 2025 - Public Holiday List 

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன்படி மொத்தமாக 2025 ஆம் ஆண்டு 24 நாட்கள் பொது விடுமுறையாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணியை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது 

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- புதன்

02. தைப்பொங்கல் (ஜன.,14) - செவ்வாய்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.,15) - புதன்

04. உழவர் திருநாள்(ஜன.,16) - வியாழன்

05. குடியரசு தினம் (ஜன.,26)- ஞாயிறு

06.தைப்பூசம்(பிப்.,11) - செவ்வாய்

07. தெலுங்கு வருட பிறப்பு( மார்ச்.,30)- ஞாயிறு

08. ரம்ஜான் பண்டிகை(மார்ச் 31)- திங்கள்

09. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- செவ்வாய்

10. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,10)- வியாழன்


11.தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

12 புனித வெள்ளி(ஏப்.,18)- வெள்ளி

13. தொழிலாளர் தினம்( மே 1) -வியாழன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 07) -சனி

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 06) -ஞாயிறு


16. சுதந்திர தினம்( ஆக.,15)- வெள்ளி

17. கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.,16) - சனி

18. விநாயகர் சதுர்த்தி( ஆக.,27) -புதன்

19. மீலாடி நபி( செப்.,09) - வெள்ளி

20. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,01)- புதன்


21.விஜயதசமி( அக்.,02) - வியாழன்

22. காந்தி ஜெயந்தி( அக்.,02) - வியாழன்

23. தீபாவளி ( அக்.,20) - திங்கள்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - வியாழன்


ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பட்டியலில், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு முதல் பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் என டிசம்பர் 25ஆம் தேதி வரை மொத்தம் 24 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 23 பொதுவிடுமுறை நாள்களில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாள், தெலுங்கு புத்தாண்டு நாள், மொஹரம் என மூன்று நாள்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துள்ளன. முக்கிய பண்டிகை நாள்கள் எதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வராததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொ வள்ளலாகும் ஜனவரி

ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து விடுமுறை நாள்கள் உள்ளன. ஆனால், அதில் குடியரசு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டது.

ஒரே நாளில் இரண்டு விடுமுறை

அக்.2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தி. வழக்கமாக அன்று விடுமுறைதான். ஆனால், அதே அக்.2ஆம் தேதியே இந்த ஆண்டு விஜயதசமியும் வருவதால் ஒரு நாள் விடுமுறை வீணாகிப் போனதாக மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

விடுமுறை இல்லாத நவம்பர்

மொத்தமுள்ள 12 மாதங்களில் பிப்ரவரி மாதத்தில் கூட, தைப்பூசத்துக்காக ஒரு நாள் விடுமுறை இருக்கிறது. ஆனால், நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லை.

G.O 792 - 2025 - Public Holiday List - PDF Download Here 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive