Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

 
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத் தலைவர்

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது தலைமை நீதிபதியை சேர்த்து 34 ஆக உள்ளது.

தலைமை நீதிபதியை சேர்க்காமல் நீதிபதிகளின் எண்ணிக்கையை 33ல் இருந்து 37 ஆக உயர்த்த மே 5 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை குழுவில் முடிவு செய்யப்பட்டது.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பணிச்சுமையை குறைக்கவும் இந்த முடிவு எட்டப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்த 1956 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை சட்டத்தை திருத்தி, 2026 திருத்த அவசர சட்டம் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இல்லாத காலங்களில் அவசரச் சட்டங்களை பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 123இன் கீழ் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடைசியாக 2019ஆம் ஆண்டில் தலைமை நீதிபதி தவிர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 30 லிருந்து 33 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து அந்த எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்தப் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள உள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive