தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2026-27-ம்
கல்வியாண்டுக்கான தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்
சீர் மிகு சட்டப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அனைத்து
அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் (அரசு
ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) உள்ள 5 ஆண்டு ஒருங்கிணைந்த
சட்டப்படிப்புகளுக்கு வருகிற 18ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம்
(ஜூன்) 5-ந்தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற அதி
காரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும்
3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர்
அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...