Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விவசாயக் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு

விவசாயக் கடன் தள்ளுபடி -  முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் 83 நாள் 25.5.2026

Click Here To Download PDF 

தமிழ்நாட்டில் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன்கள் முழுமையாக ரத்து.

 தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28க்குள் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்த தள்ளுபடி

* பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு

📌   கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி

📌   ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி

📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி

📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி

📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி

📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி

📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி 

📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி 

📌 ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி 

80,001 - 90 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

ரூ 1 லட்சம் மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கும் சிறு விவசாயிகளுக்கும் ரூ 5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ 5000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ 2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive