Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

 
SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

648035

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்:

மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 22.05.2026 அன்று பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் சென்று SSLC Provisional Mark Certificate என்பதை Click செய்து தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் ஒளிநகலுக்கு விண்ணப்பம் செய்தல்:

விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் 27.05.2026 மாலை 5.00 மணி (புதன்கிழமை) (24.05.2026 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் ஒளிநகல் (Scan Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- தேர்வர்கள் விடைத்தாட்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் ஒளிநகலினை (Scan Copy) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.tn.gov.in இணையதளத்திலும் வெளியிடப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive