Public Exam 2026
அரசு பள்ளிகளில் 19பேர் சாதனை
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 499 மதிப்பெண்கள் பெற்று
முதலிடத்தில் 3 பேரும், 498 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் இரண்டாமிடமும், 497
மதிப்பெண்கள் பெற்று 10 பேர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
நம் கல்வி... நம் உரிமை!- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து!
கல்வியின் எல்லை மதிப்பெண்தான் என்றாகிவிட்ட
இன்றைய சூழலில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் நம் கல்விமுறை பற்றிய
கவலையை அதிகரித்தன. பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு, கணிதத் தேர்வு நடந்த
அன்று, ஒரு மாணவன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானது.
பிணையத் தொகையாக ரூ.2 லட்சம் கேட்டதாகத் தகவல். இறுதியில், அது அந்த மாணவனே
நடத்திய நாடகம் என்று தெரியவந்தது. கணிதத் தேர்வில் தோல்வியடைந்து
விடுவோமோ என்ற பயத்தில், மற்றொரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.
பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை
எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை)
காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து
படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில்
முதலிடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர்
அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 4 பேர் மாணவர்கள்.
அவர்கள் விவரம் வருமாறு:
10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்
10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து
கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது. 10ஆம் வகுப்பு அரசு பொது
தேர்வில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி
கே.தேவதாநிலானியும், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமியை சேர்ந்த தனபிரியா
ஆகிய இருவரும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியான மதிப்பீடு
மாவட்டம் - தேர்வு எழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் - தேர்ச்சி விகிதம் - பள்ளிகளின் எண்ணிக்கை
1-ஈரோடு - 30014 - 29425 - 98.04 - 342
2-விருதுநகர் - 30534 - 29918 - 97.98 - 333
தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ?
இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர்
மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை
வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து
60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40
ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சென்னை சேலையூர் சியோன்
பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம்
பெற்றுள்ளார்.மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம்
பிடித்துள்ளனர்.
10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 41 மாணவர்கள் முதலிடம்
சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு
வெளியிடப்பட்டது.10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு
மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர்.
இன்று 10ம் வகுப்பு ரிசல்ட்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.
தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
பள்ளிக்கு
செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமை
ஆசிரியையை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
2வருட பிஎட் பாடங்கள் விவரம் இதோ 4 செமஸ்டர் முறை
Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the
Courses Semester 1
Course 1 Childhood and Growing Up 100 marks
Course 2 Contemporary India and Education 100 marks
2ஜி, 3ஜி நெட் சேவைக்கு பிஎஸ்என்எல் புதிய சலுகை
பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி நெட் சேவை பயன்படுத்துவோர் தாங்கள் பயன்படுத்தாத டேட்டாக்களை அடுத்த ரீசார்ஜில் சேர்த்துக்
கொள்ளும் முறையை பி.எஸ்.என்.எல் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இது
குறித்து பி.எஸ்.என்.எல் நுகர்வோர் துறை இயக்குநர் என்.கே. குப்தா
கூறுகையில், பி.எஸ்.என்.எல் ப்ரீ பெய்ட் கார்டு மூலம் 2ஜி மற்றும் 3ஜி இணைய
சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சேவை காலம் முடிந்த பின்பு, மீதம்
இருக்கும் டேட்டாக்களை அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்திக்
கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம்.
அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 3 கல்வியாண்டுகளாக இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் திரும்ப பெறுமா?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இன்று (21-ம்தேதி) வெளியாக இருப்பதால், அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக
இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்
மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்
துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு
அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி
அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய
பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும்
அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு
'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற
முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும்,
மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி
மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு
மத்திய
அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட
வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது
குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு
உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள்
அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு
பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு
உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும்,
பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் - இயக்குனருக்கு கோரிக்கை
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இயக்குனருக்கு கோரிக்கை
10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
தனது உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென நினைக்கும் தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
பெங்களூரு மாநகரில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள்
பெங்களூரு மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதியில்
வாகன போக்குவரத்து இயக்குவதில் சில மாற்றங்கள் செய்து
அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் தினமும் வேகமாக வாகன இயக்கம்
அதிகரித்து வருகிறது. மாநகரில் உள்ள பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ,
மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனியார் வாகனம்
பயன்படுத்துவது சாமானியமாகி விட்டது.







