Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களை துன்புறுத்தக் கூடாது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தல்

         மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில் பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால் அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.

       சுற்றறிக்கை: அண்மையில் "ஸ்கேல்' கொண்டு ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவ-மாணவிகளை எந்தக் காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. "ஸ்கேல்', கம்பு, கை உள்ளிட்ட எதைக் கொண்டும் அடிக்கக் கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தது உறுதி செய்யப்பட்டால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




3 Comments:

  1. ARGTA (all resource graduated teacher association) brte association taking continuous effort on brte conversions 885 for this year.m.o madurai.b.o.villupuram 9443378533

    ReplyDelete
  2. ///மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது///
    உண்மைதான். ஆனால் மன ரீதியாக ஆசிரியர்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்கு என்று விடிவுகாலம் பிறக்கும்?

    ReplyDelete
  3. Teachers kku Mana Ulaichalai kodukum Student kku uriya punish ment than enna?????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive