Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி செயலர் நியமனத்தை புதுப்பிக்காததால் 5 பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் பண்டிகை நேரத்தில் திண்டாட்டம்

           நெல்லை டவுனில் அரசு உதவி பெறும் 5 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
             நெல்லை டவுன் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின் கீழ் 41 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 28 பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு மானியம் பெற்று சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நெல்லை டவுனில் செயல்படும் 5 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இம்மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 5 பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
              பள்ளி செயலர் நியமனத்தை புதுப்பிக்காமல் இருப்பதால், ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை நிறுத்தி வைப்பதற்கு கல்வித்துறை இணை இயக்குனரின் அனுமதி பெற வேண்டும். ஆனால் டவுனில் உள்ள 5 பள்ளிகளுக்கும் இணை இயக்குனரின் உத்தரவு இல்லாமல், அதிகாரிகளே தன்னிச்சையாக சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளதால், அப்பள்ளிகள் மாத சம்பளம் கேட்டு மேல் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
 
               இது குறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “நெல்லை டவுன் உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு உட்பட்டு பல பள்ளிகள் செயலர் நியமனத்தை புதுப்பிக்காமல் காணப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட 5 பள்ளிகளுக்கு மட்டும் செப்டம்பர் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் செயலர் நியமனத்தை புதுப்பிக்க உரிய கருத்துருக்களை உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டன. ஆனால், அந்த கருத்துருக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
 
             நாளை ஆயுத பூஜை வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் சம்பளமின்றி, ஜவுளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க இயலாது. மேலும் பண்டிகைக்கு நாங்கள் கேட்ட முன்பணத்திற்கான விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் எங்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனர்.
 
           இதுகுறித்து, நெல்லை டவுன் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாரியம்மாளிடம் கேட்டபோது, “அரசு உதவி பெறும் பள்ளிகள், தங்கள் பள்ளி செயலர் நியமனத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. அவ்வாறு புதுப்பிக்கும்போது கட்டிட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று, தாசில்தார் உரிமம், சுகாதார சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட 5 பள்ளிகளுக்கும் முறையான தகவல் தெரிவித்த பின்னரே, நாங்கள் கற்பித்தல் மானியத்தை நிறுத்தி வைத்துள்ளோம். புதுப்பிக்காத மற்ற பள்ளிகளுக்கும் உரிய தகவல் அளித்த பின்னர், மானியம் நிறுத்தப்படும்,” என்றார்.

செயலர் நியமனத்திற்கான நடைமுறைகள்
 
             அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக்கு உரிமையாளர் அந்தஸ்தில் எப்போதும் கல்வி முகவர் காணப்படுவார். கல்வி முகவரே செயலர் மற்றும் பள்ளிக்குழுவை நியமனம் செய்வார். பள்ளிக்குழுவில் முகவர் சார்ந்து 6 நபர்களும், தலைமை ஆசிரியர் மற்றும் மூத்த ஆசிரியர்கள் இருவர் மற்றும் பெற்றோர் ஆசிரிய கழக நியமன உறுப்பினர் ஒருவரும் இடம் பெறுவார். இப்பள்ளிக்குழு கூடி செயலரை தேர்வு செய்யும்.
 
             நெல்லை டவுன் சரகத்தில் பல பள்ளிகள் செயலரை தேர்வு செய்து, அதற்கான நியமனத்தை புதுப்பிக்க உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு கருத்துருக்களை அனுப்பி விட்டன. ஆனால், இன்று வரை அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செயலர் நியமனத்தை புதுப்பிக்கவில்லை எனக்கூறி கற்பித்தல் மானியத்தை நிறுத்துவதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.உடனே ஊதியம் வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணி  மாவட்ட தலைவர் வின்சென்ட்  வேண்டுகோள் விடுத்துள்ளார்

- Dinakaran Paper News.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive