Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குளறுபடி பாடத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்வித்துறைக்கு 'நோட்டீஸ்': கலை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை

         'ஓவியம் தொடர்பான குளறுபடியான பாடத்திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், வழக்கு தொடரப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கலை ஆசிரியர் சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
         அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் கலை ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். இந்த இடங்களில், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வை நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்த உள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. இதற்கு கலை ஆசிரியர்கள், ஓவியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடத் திட்டத்துக்குரிய புத்தகங்கள், ஆன் - லைன் உட்பட எங்கும் கிடைக்கவில்லை. இப்பாடத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கலை ஆசிரியர் சங்கம் சார்பில், கல்வித் துறைக்கு சட்ட ரீதியாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: சிறப்பு ஆசிரியர் போட்டி தேர்வுக்கு, கொஞ்சமும் புரியாத பாடத் திட்டம், ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து தலைப்புகளில், 95 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையும் என, பாடத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலையின் வரலாறு' தலைப்பில், வெளிநாட்டுக் கலைகளின் வரலாறு மற்றும் அதன் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு இங்கே புத்தகங்களே கிடையாது. 'கலையும், தமிழ் இலக்கியமும்' தலைப்பில், ஓவியங்கள் மட்டுமே உள்ளன. எழுத்துத் தேர்வுக்கான தகவல்கள் கிடைக்கவில்லை. பாடத்திட்டத்தை ரத்து செய்து, வேறு பொருத்தமான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.




4 Comments:

  1. Drawing materials available in internet

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர் வணக்கம் .
      வலைதலத்தின் முகவரி வெளியிட்டுயிருப்பின் எல்லோரும் பயன் அடைந்துயிருப்போம் - நீங்கள் விரைவில் வெளியிடுவிர் பாடசாலை வலைத்தலத்தின் வழியே !

      Delete
    2. Enter the topic in Google. You get the drawing material.

      Delete
  2. All drawing teachers will prove our subject knowledge, so we must write TRB exam and work free only on drawing subject.So study well get the job.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive