Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பாசிரியர் கோரிக்கை-போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு

குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர்.
பணி நிரந்தரம் தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சிறப்பாசிரியர்களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது.பாடத்திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளதாகவும், அதிக கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கு கூட, கடினமாக உள்ளதாகவும், கலை ஆசிரியர்கள்அரசுக்கு மனு அனுப்பினர். மேலும், பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத் தலைவர்ராஜ்குமார், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பினார்.

ரத்து செய்ய முடியாது இதை விசாரித்த அரசு, போட்டித் தேர்வு அரசின் கொள்கை முடிவு என்பதால், ரத்து செய்ய முடியாது; பாடத்திட்டமும் மாற்றிஅமைக்கப்படாது என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இத்தகவலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனால், இத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று சிறப்பாசிரியர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.





3 Comments:

  1. It's expected once from this government

    ReplyDelete
  2. பள்ளிக்கல்வித்துறை மிகவும் தெளிவாக பாடத்திட்டம் ஓவியத்திற்கு அறிவிப்பு செய்துள்ளது, இதில் சிலர் ஆதாயம் தேட குழப்பம் செய்கிறார்கள் , கதிரவன் ,விழுப்புரம்

    ReplyDelete
  3. 17,000 part-time special teachers are working in govt schools including computer teachers but no exam for computer subject when will this government consider computer also important for present education

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive