மேஷம்
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள்
மதிப்பார்கள்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில்
புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம்
உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை
கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம்
அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின்
ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கடகம்
எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால்
அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில்
எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில்
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப்
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
கன்னி
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில்
மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில்
மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
விருச்சிகம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள்
வந்து விலகும். சகோதர வகையில் மனவருத்தம் ஏற்படும். உடல் நலம் பாதிக்கும்.
வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால்
பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
மகரம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால்
மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கும்பம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள்
முடியும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பள்ளிப் பருவ உறவுகளை
சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மீனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல்
அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். விமர்சனங்களை
கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும்.
உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...