Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வெழுதிய மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைந்தது. கடந்த 2011 முதல் 2017 வரை 7 ஆண்டு காலமாக 10-ம் வகுப்புத் தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படவில்லை. மாணவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான வருடாந்திரத் தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். இந்த ஆண்டிலிருந்துதான் முன்பு இருந்ததைப் போன்று கட்டாய பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதியும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த புதன்கிழமையும் வெளியிடப்பட்டன. இதனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதே எதிர்பார்ப்பு அவர்களின் பெற்றோரிடமும் காணப்படுகிறது.

தேர்வு முடிவுகள் மே இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் பரவியபடி உள்ளன. சிபிஎஸ்இ-யைப் பொறுத்தவரையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளுக்கு முந்தைய தினம் அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive