2 மணி நேரத்தில் இனி டெலிவரி: அமேசான்!!2 மணி நேரத்தில் இனி டெலிவரி: அமேசான்
அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் பொருட்களை டெலிவரி செய்ய புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நிறுவனமான அமேசான், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், குறிப்பிட்ட சில பொருட்களை, ஆர்டர் செய்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே டெலிவரி செய்யும் வகையில் புதிதாக ‘பிரைம் நவ்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேநேரம், பெங்களூரு, மும்பை, டெல்லி,ஐதராபாத் ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டுமே தற்போது இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செயலி மூலம் பொருள்கள் வாங்குவோருக்கு 15% விலை தள்ளுபடியும் அளிக்கிறது அமேசான். காலை 6மணி முதல் நள்ளிரவு வரை இந்த டெலிவரி சேவையைப் பெற முடியும். இந்த பிரைம் நவ் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ஃபைர் டிவி ஸ்டிக்,கிண்டில், கிண்டில் பேப்பர் வொயிட்,அமேசான் எக்கோ டாட்,எக்கோ போன்ற பொருட்கள் தொடங்கி சுமார் 10000க்கும் அதிகமான பொருட்களை இந்த செயலியில் ஆர்டர் செய்து பெற முடியும்.

Share this